கார் மீது விழுந்த மெட்ரோ பேரிகேட் தாய் குழந்தை உயிர் தப்பினர்

பெங்களூரு, ஜன 22-
மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கார் மீது மெட்ரோ தடுப்பு கம்பி விழுந்தது.
காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொட்டனெக்குண்டி சந்திப்பில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தடுப்பு வேலி விழுந்ததில், காரில் இருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொட்டனெக்குண்டியிலிருந்து மகாதேவ்பூர் நோக்கி செல்லும் பிரதான சாலையில் நடந்தது. தாயும் மகளும் ஹூண்டாய்-10 காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். கார் சென்று கொண்டிருந்த போது மெட்ரோ தடுப்பு வேலி விழுந்தது. கார் சிறிது சிறிதாக முன்னோக்கி சென்றதால், கார் பகுதியளவு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரின் முன் இருக்கையில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். விசாரணை நடத்தினர்