கார் மோட்டார் சைக்கிள்மோதல் 2 பேர் பலி

கார்வார் : அக்டோபர் . 16 – மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இன்னோவா கார் வேகமாக மோதியதில் இரண்டு இளைஞஞர்கள் அதே இடத்தில் உயிரிழந்திருப்பதுடன் மற்றொரு இளைஞன் படு காயமடைந்துள்ள சம்பவம் எல்லாபுராவின் புறப்பகுதியில் நடந்துள்ளது .
ஹுணஷெட்டி கொப்பவை சேர்ந்த தர்ஷனா மற்றும் ராமணக்கோப்பவை சேர்ந்த ராஜு பண்டாரி
ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். இந்த விபத்தில் படு காயமடைந்த ஜாபீர் என்பவரை ஹூப்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எல்லாபுராவின் கே பி வீதியின் ஷானாபாக் ஓட்டல் அருகில் முன்னாள் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் திடீரென வலப்புறம் ஓட்டல் பார்க்கிங்க் இடத்திற்கு திரும்பியபோது பின்னாலிருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதியுள்ளது. இந்த மோதலால் மோட்டார் சைக்கிளில்
இருந்த மூன்று பேரும் தூக்கி வீசியெறியப்பட்டுள்ளனர் . இதன் விளைவாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த தர்ஷன் மற்றும் ராஜு பண்டாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அருகில் உள்ள சி சி டி விக்களில் பதிவாகியுள்ளது.தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எல்லாபுரா போலீசார் பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.