கார் மோதியதில் தீப்பிடித்த வேன்:சிறுமி கருகி பலி – 3 பேர் கவலைக்கிடம்

பெங்களூரு, ஏப். 22: தும்கூர் சாலை மாத‌வர டோல்கேட் முன்பாக வேகமாக வந்த பலேனோ கார், ஆம்னி வேன் மீது மோதி, தீப்பிடித்ததில் சிறுமி உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதில் தாசன்பூரைச் சேர்ந்த திவ்யா (14) என்ற சிறுமி உயிரிழந்தார். வேன் தீப்பிடித்ததில் மயங்க், மஞ்சுளா, சுனிதா, தருண், மகேஷ், நமன், சாந்திலால், நமன், சுனிதா, மயங்க் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பெற்று வரும் நமன், சுனிதா, மயங்க் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இரவு 10 மணியளவில் தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பிகெரே, தாசானுபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மாருதி ஆம்னி வேனில் 8 பேர் வந்து கொண்டிருந்தனர். பலேனோ காரில் மூன்று பேர் இருந்தனர். அப்போது பின்னால் வந்த பலேனோ கார், ஆம்னி வேன் மீது 3 முறை மோதியது. இதனால் ஆம்னிவேன் கவிழ்ந்தபோது தீப்பிடித்து எரிந்தது.
வேனில் இருந்த சிறுமி திவ்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர். பலேனோ காரில் இருந்த மூவரில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எரிந்த கார் கிரேன் மூலம் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது.
பெட்ரோல் கசிவு காரணமாக ஆம்னி பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலேனோ காரில் இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மூன்று பேரில் ஒருவர் பலத்த காயம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ரூரல் எஸ்பி மல்லிகார்ஜுன பாலதாண்டி தெரிவித்தார்.