கார் லாரி மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சாவு

சிந்தனூறு : ஜூலை. 18 – அதிகாலை வேளையில் லாரி மற்றும் ஆல்டோ காருக்கிடையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் நான்கு பேர் இறந்துள்ள சம்பவம் இம்மாவட்டத்தின் ஜவலகேரா அருகில் உள்ள பாலைய்யா கேம்ப் அருகில் நடந்துள்ளது. பெங்களூரிலிருந்து ஹைதராபாதிற்கு சென்றுகொண்டிருந்த சிவப்பு வண்ண ஆல்ட்ரோ காரில் கணவன், மனைவி மற்றும் இவர்களின் இரண்டு குழந்தைகள் பயணித்தனர். எதிரில் இருந்து வேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர விபத்தால் ஆல்டோ கார் முழுதுமாக அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் சக்சேனா (35) , பூர்ணிமா சக்சேனா (30) , ஜதீன் சக்சேனா (12 ) மற்றும் மாஹின் சக்சேனா (7) என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பலகாரூ போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த்திருப்பதுடன் இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாயிருப்பதுடன் அவனை தேடும் முயற்சியில் போலீசார் உள்ளனர்.