காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை: பிப்.28- தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
பட்டதாரி அல்லாத பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.27-ம் தேதி முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத் தில் ஈடுபடுவது என பெரம்பலூரில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவர்கள் பணியை புறக்கணித்து, மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புள்ளிவிவரத்தின்படி, தமிழகம் முழுவதும் நேற்று 10,327 பேர் பணிக்கு வரவில்லை.
இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கபொதுச்செயலாளர் சு.சங்கரலிங் கம் கூறியதாவது:
வருவாய்த்துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டதாரி அல்லாதபணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்து விதி திருத்த அரசாணை வெளியிடவில்லை.மேலும், வருவாய்த்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை முறையே இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனபெயர் மாற்றம் செய்ய வேண்டும்என கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. 8 ஆண்டுகள் ஆகியும் விதித்திருத்தம் செய்யப்படவில்லை. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.