காலிப்ளவர் கூட்டு

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
காலிப்ளவர்
வெங்காயம்
கரம் மசாலா
சிவப்பு மிளகாய் தூள்
எள்ளு தூள்
மஞ்சள் தூள்
உப்பு
தாளிக்க :
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
கொத்து மல்லி
செய்யும் முறை : முதலில் காலிப்ளவரை உரித்து சூடு நீரில் போட்டு நன்றாக கழுவிக்கொள்ளவும். கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் அல்லது உப்பும் சேர்த்து கொள்ளலாம். அதனால் காலிப்ளவரில் உள்ள சிறு பூச்சுக்கள் புழுக்கள் வெளியேறிவிடும். பின்னர் கடலை பருப்பை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெங்காயத்தை சிறிதாக அறுத்து கொள்ளவும். வெங்காயத்தை பயன்படுத்துவதும் படுத்தாததும் அவரவர் விருப்பம். ஏனெனில் வெங்காயத்தை பயன்படுத்தாததால் ருசி ஒன்றும் குறைந்து விடாது. பின்னர் வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீராகம் ,மஞ்சள் தூள் , கறிவேப்பிலை மற்றும் சிறிதாக வெட்டிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த கடலை பருப்பு மற்றும் காலிப்ளவரை போட்டு அதில் கரம் மசாலா , எள்ளு பொடி மிளகாய் தூள் , ருசிக்கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து நன்றாக கொதிக்க வைத்து பின்னர் கடைசியில் அதில் கொத்துமல்லியை சேர்த்த விட்டால் காலிப்ளவர் கூட்டு சப்பாத்தி, ரொட்டி , இட்லி தோசை ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட தயார்.