காலியாக கிடந்த ஏடிஎம்மில் பணம் வைக்கும் பெட்டிகள்

பெங்களூரு, பிப். 15: மேற்கு பெங்களூரில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கி ஏடிஎம் அருகே, ஏடிஎம்மில் பணம் வைக்கும் பெட்டிகள் காலியாக இருந்தது கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கலாசிபாளைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலிசாரின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான நபர், பழைய காகிதங்களை சேகரிப்பவர் என‌ அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 2 பெட்டிகளையும் பழைய இரும்பு கடையில் விற்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று காவல்துறை துணை ஆணையர் (மேற்கு) எஸ். கிரிஷ் கூறினார். “பெட்டிகளில் வரிசை எண்கள் இருப்பதால் நாங்கள் அதை தயாரித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை” என்று வங்கி அதிகாரிகள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.