கால் வலியால் சட்ட மன்ற கூட்டத்திற்கு வர முடியவில்லை: ஈஸ்வரப்பா

சிவமொக்கா : செப்டம்பர் . 14 – தனக்கு கால் வலி இருந்ததால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதால் சட்டமன்ற கூட்ட தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என பாரதீய ஜனதா பிரமுகர் கே எஸ் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். தொட்டபள்ளாபுராவில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளாதது குறித்து எழுந்த பல சந்தேகங்களுக்கு ஈஸ்வரப்பா இன்று இந்த விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சிவமொக்காவில் இன்று அறிக்கை அளித்துள்ள அவர் எனக்கும் சட்டமன்ற கூட்ட தொடரில் கலந்து கொள்ள வேண்டு என்ற ஆசைகள் இருக்கிறது. ஆனால் கால் வலியால் பங்கு கொள்ள முடிய வில்லை. இதற்க்கு வேறெந்த காரணமும் இல்லை. சித்தராமையா வெள்ள பகுதிகளை பார்வையிட படகில் சென்றது குறித்து அறிந்துள்ளேன் , வெறும் ஒன்றரை அடி தண்ணீர் தான் தேங்கியுள்ளது. . அந்த தண்ணீரில் என் பேரன் நடந்து செல்கிறான். ஆனால் சித்தராமையா இந்த ஒன்றரை அடி நீருக்கு பயந்து படகில் நின்றபடி சென்று நான் எதிர்க்கட்சி தலைவனாக வெள்ள பகுதிகளை பார்வையிட்டேன் என காட்டிக்கொள்ள நாடகம் ஆடுகின்றார். அக்கிரம ஆக்கிரமிப்புகளை பி ஜே பி அரசு அகற்றி வருகிறது . இந்த பணியை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது ஏன் செய்யவில்லை. நலபாட்டுக்கு சொந்தமான நிறுவனங்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தனை வருடங்களாக ஆக்கிரமிக்கு ஒப்புதல் அளித்ததே காங்கிரஸ் ஆட்சிதான் எனவும் ஈஸ்வரப்பா எதிர்க்கட்சியை காட்டமாக சாடியுள்ளார்.