காவிரி வழக்கு விசாரணை

பெங்களூரு, செப்டம்பர் 6- காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 7 நாட்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.