பெங்களூரு, செப்டம்பர் 29: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கம் நடத்திய பந்த் அழைப்புக்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது, பந்த் அமைதியான முறையில் நடந்தது எங்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. எனினும், அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், மைசூர், மாண்டியா, ராமநகரா, சாமராஜநகர், ஹாசன், சிக்கமகளூரு, கோலார், சித்ரதுர்கா, தும்கூர், ஹூப்ளி-தர்வாட் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பந்த் வெற்றியடைந்துள்ளது. தாவணகேரே, பிஜாப்பூர், பாகல்கோட், ஷிமோகா, ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, பிதர், பெல்காம், கதக், கலபுர்கி, ஹாவேரி மாவட்டங்களில் பந்த்க்கு கலவையான வரவேற்பும், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு போன்ற கடலோர மாவட்டங்களிலும் பந்த் நடந்தது.
கர்நாடக பந்த் காரணமாக தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வணிக பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துள்ளன.கடைகள் மூடப்பட்டன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு மற்றும் பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகம் இல்லை பொதுமக்களின் வருகையும் அரிதாகவே உள்ளது, மேலும் பழைய மைசூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் வருகை குறைவாக உள்ளது.

பந்த் போராட்டத்திற்கு கன்னட திரையுலகினர், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், தனியார் வாகன சங்கம், ஆட்டோரிக்ஷா, டாக்சி அமைப்புகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திரைத்துறையின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஆட்டோ, டாக்சி சேவைகளும் நிறுத்தப்பட்டதால், நகரில் இருந்து காலையில் வந்த பயணிகள் சிரமப்பட்டனர். விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் டாக்சி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடக் எதிர்ப்பு தெரிவித்து கன்னட ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பந்த், முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதையடுத்து, கண்டன ஊர்வலம் நடைபெற்றது. வாட்டாள் நாகராஜ் தலைமையில் தலைநகர் பெங்களூரு சுதந்திரப் பூங்கா அருகே இந்தப் போராட்டம் நடந்தது இதில் அனைத்து முக்கிய கன்னட ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும் இந்த கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் கன்னட திரைப்பட வர்த்தக வாரியம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம், கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கன்னட திரையுலகினர் குருராஜ் கல்யாண மண்டபம் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஹூப்பள்ளி சென்னம்மா வட்டத்தில் கன்னட சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு தீ வைத்து எரித்தனர்.
