காவேரி – கர்நாடகத்தின் உரிமை காக்க தர்ஷன் சுதீப் வலியுறுத்தல்

பெங்களூரு, செப். 20-
காவிரி விவகாரத்தில் கன்னட நடிகர்கள் குரல் எழுப்புவதில்லை என்று கன்னட ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நடிகர்கள் சுதீப் மற்றும் தர்ஷன் ஆகியோர் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்து உள்ளனர்
இது தொடர்பாக 2 நடிகர்கள் ட்வீட் செய்து உள்ளனர். அதில் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் தர்ஷன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவின் பங்கான காவிரி நீரை குறைத்து அதிக தண்ணீரை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் பாசனப் பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அனைத்து புள்ளி விவரங்களையும் பரிசீலித்து விரைவில் நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
நடிகர் சுதீப் தனது டிவிட்டர் பக்கத்தில் காவேரி எங்கள் உரிமை. அரசு காவேரியை நம்பும் மக்களை கைவிடாது என்று நம்புகிறேன்.
நிபுணர்கள் உடனடியாக ஒரு வியூகத்தை வகுத்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிலம்-நீர்-மொழிப் போராட்டத்தில் நானும் குரல் கொடுக்கிறேன். என்று கூறியுள்ளார்