காவேரி தலைகாவேரியில் தீர்த்தோற்சவம்

மடிகேரி, அக். 18: குடகு மாவட்டத்தில் காவேரி பிறக்கும் இடமான தலைகாவேரியில் ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி காவேரி தீர்த்தோத்பவம் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி செவ்வாய்கிழமை நள்ளிரவு 1.27 மணிக்கு கடக லக்னத்தில் தீர்த்தோற்சவம் தொடங்கியது.
காவேரி தீர்த்தோத்பவ நீரைப் பருகினால் நோய்கள் குறையும் அல்லது நீங்கும், மீண்டும் நோய்கள் வராது என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. தலகாவேரி தீர்த்தோத்பவத்தைப் பற்றிய மிகவும் புனிதமான நம்பிக்கை நாடு முழுவதும் நிலவுகிறது.
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள தலைகாவேரியின் பிரம்மகுண்டிகேயில் காவேரி தீர்த்தரூபிணியாக காட்சியளித்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். இந்த புண்ணிய தருணத்தை காண பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். காவேரி தீர்த்தோத்பவமானது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் அதாவது துலாப் பெயர்ச்சி நாளில் நடைபெறும்.
இம்முறை மழை இல்லாததால் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கம் நிரம்பவில்லை. மறுபுறம், தமிழகத்துக்கும் காவிரி நீரை வழங்கக் கூடாது என, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சலசலப்புக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.காவேரி தீர்த்தோத்பவ நிகழ்ச்சிக்கு குடகு, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தீர்த்தோற்ச‌வத்திற்கு வந்து, நீராடி, இங்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். எனவே, குடகு மாவட்ட நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது.கடந்த ஆண்டு தீர்த்தோற்சவம் மாலையில் நடைபெற்றது. இந்த ஆண்டு நள்ளிரவில் தொடங்கியது. அடுத்த ஆண்டு காலையில் தொடங்கும் எனவும், அதற்கு அடுத்த‌ ஆண்டில் பிற்பகலில் நடைபெறும் எனவும் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆறு மணிக்கு நேரத்திற்கு தீர்த்தோற்சவத்தின் முஹூர்த்தம் மாறுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த‌னர்.