காவேரி நீர் திறப்பு குறைப்பு

பெங்களூரு: அக். 17-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,648 கனஅடியில்
இருந்து 2,502 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,994 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 800 கனஅடியில் இருந்து 508 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 101.08 அடி; கபினி அணையின் நீர்மட்டம் 75.28 அடியாகவும் உள்ளது.