
புது டில்லி, செப்.19-
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை குழு அளித்துள்ள உத்தரவு பற்றி ,முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றுமை இல்லை என்று தெரிவித்தார்.
டெல்லி செய்தியாளர் களிடம் அவர் இது குறித்து கூறுகையில், இன்றைய காவிரி நீர் மேலாண்மைக் குழு உத்தரவு மிகப்பெரிய அடியாகும். ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருக்கு குடிநீர் தேவை. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. நமது மாநில அரசு எடுத்த முடிவு பேரிழப்பு. எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
எங்கோ தடுமாறி விட்டோம். நமது மாநிலத்தின் அநீதிக்கு எதிராக நான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தேன். உள்ளிருப்பு போராட்டத்தில் அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளோம். காவிரி நீர் பிரச்சனையை ராஜ்யசபாவில் எழுப்பி உள்ளோம் .கர்நாடக, தமிழக அரசுகளுக்கு தொடர்பே இல்லாத அதிகாரிகளை களம் இறக்கட்டும்.
அந்த அதிகாரிகள் குழு உண்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆணைய உத்தரவை ஏற்கிறோம். ஆனால் தமிழகம் தான் ஏற்கவில்லை. தமிழக அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை நிலவுவதாக வருத்தம் அடைகிறேன்.
நமது அரசியல் வாதிகளிடையே ஒற்றுமை இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைக்க எந்த விவாதமும் இல்லை.
நான் பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. கூட்டணி தொடர்பாக யாரையும் சந்திக்கவும் இல்லை. இதற்கான விவாதம் வரும்போது பேசுவோம். இப்போது இருக்கும் இடத்திலேயே இருப்போம். இந்தியா கூட்டத்திற்கு எங்களை அழைக்கக்கூடாது என்று சித்ராமய்யா நிதீஷ் குமாரிடம் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.