காஷ்மீரில் துப்பாக்கி சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், நவ.11- ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் சுப்ரீன் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் கம்ரான் என்பதும், இவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் சோபியான் மற்றும் புல்கான் பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனடம் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-video-of-a-wild-elephant-overrunning-a-government-bus-carrying-passengers-in-the-kumuli-forest-area-in-kerala-has-gone-viral-on-social-media-535061?infinitescroll=1