கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

தர்மபுரி,நவ.3-
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டியான்கொட்டாய் கிராமத்தில், உள்ள விவசாய கிணற்றில் பசுமாடு ஒன்று நேற்று தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசுமாட்டை சுமார் இரண்டு மணி நேர முயற்சிக்கு பின், கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர், பின்னர் உயிருடன் மீட்ட பசுமாட்டை, சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.