கிராமி விருதிற்கு ஷங்கர் மகாதேவன் மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் ‘திஸ் மொமென்ட்’ ஆல்பம் தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ்,பிப்.5- பிப்.5: மதிப்புமிக்க “கிராமி” விருது இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன் மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் ‘திஸ் மொமென்ட்’ ஆல்பம் தேர்வாகி உள்ளது.
இசைத்துறையில் மதிப்புமிக்கதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்திய இசைக் கலைஞர்களான ஷங்கர் மகாதேவன் மற்றும் ஜாகீர் உசேன் இந்த ஆண்டுக்கான கிராமி விருதை வென்றதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற
இசைக் கலைஞர்கள் முன்னிலையில் இந்திய இசை ஜாம்பவான்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
8 பேர் இணைந்து ‘திஸ் மொமென்ட்’ என்ற ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளனர். ஜான் மெக்லாலின் (கிட்டார்), ஜாகீர் உசேன் (தப்லா), சங்கர் மகாதேவன் (பாடகர்), வி. செல்வகணேஷ் (தாள வாத்தியக்காரர்), கணேஷ் ராஜகோபாலன் (வயலின் கலைஞர்) ஆகியோர் ‘திஸ் மொமென்ட்’ ஆல்பத்திற்காக கடுமையாக உழைத்துள்ள‌னர்.கடந்த முறை கன்னடர் ரிக்கி கேஜ் இசையமைத்த ஆல்பம் கிராமி விருதை வென்றது. இது ரிக்கி கேஜ் பெற்ற‌ இரண்டாவது கிராமி விருதாகும்.