கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கு சிலை

மும்பை, மார்ச் 1-
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு சிலை வைக்கப்பட உள்ளது. தெண்டுல்கருக்கு சிலை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர். இவர் இந்தியாவுக்காக 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியிலும் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவரான சச்சின் தெண்டுல்கருக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது. அமோல் காலே கூறுகையில், “சிலை வைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மைதானத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் சங்க அறைக்கு எதிரே சிலை வைக்கப்படும். பணிகள் முடிய 4-5 மாதங்கள் ஆகும். 2023-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட்டின் போது சிலை திறந்துவைக்கப்படும். பிரபலமான கிரிக்கெட் மைதானத்தில் வீரருக்கு சிலை வைக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும். சிலை வைக்க சச்சின் தெண்டுல்கர் அனுமதி அளித்து உள்ளார்” என்றார். தெண்டுல்கர் பார்வையிட்டார் இந்தநிலையில் சிலை வைக்கும் இடத்தை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலியுடன் வான்கடே மைதானத்துக்கு வந்தார்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. எனது ரஞ்சி போட்டி ஆட்டத்தை இங்கு தான் விளையாடினேன். ஒருநாள் கிரிக்கெட் பயிற்சியாளர் அச்சரேக்கர் என்னை இங்கு திட்டினார். அதன்பிறகு தான் நான் தீவிர கிரிக்கெட் வீரனாக மாறினேன். . மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.