கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான்?

மும்பை, செப். 12- தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல்,
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.