கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா

துபாய், செப்.22-
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடி வருபவருமான டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் டி.நடராஜன்.ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பங்களித்ததால் ஆஸ்திரேலிய டூரில் இடம் பெற்று முன்று விதமான போட்டிகளில் அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் 2021 முதல் பாதி தொடரிலிருந்து விலகினார். திருக்கும். ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 2021 முதல் பாதி தொடரிலிருந்து அவர் விலகினார். இப்போது 2வது பாதி எமிரேட்சில் நடைபெற்று வருவதால் நடராஜனின் பவுலிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் (விளையாட்டு வீரர்), விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வண்ணன் (மருத்துவர்), துஷர் கேதர் (தளவாட மேலாளர்), பெரியசாமி கணேசன் (வலை பந்துவீச்சாளர்) ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதையடுத்து இன்று இரவு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.