கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா தொற்று


கிருஷ்ணகிரி, ஏப்.21-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 9 ஆயிரத்து 165 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,698 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 115 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 121 பேர் இறந்துள்ளனர்.