கிலோ ரூ.2,500

புதுச்சேரி ஜன. 14-
புதுச்சேரிக்கு தேவையான பூக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், புதுவை சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகையை பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்தநிலையில் நேற்று கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை ஒரேநாளில் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பபட்டது. கனகாம்பரம்- ரூ.600, அரளி-ரூ.400, ரோஜா-ரூ.160, சம்பங்கி- ரூ.120 விற்பனை ஆனது.
மல்லிகை பூ உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.