Home Front Page News குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழாமுதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழாமுதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: டிச. 17:
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சிங்கப்பூரில் இருந்து குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.
சென்னைக்கு வந்த அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.

Exit mobile version