Home விளையாட்டு குகேஷ் இரண்டாவது வெற்றி

குகேஷ் இரண்டாவது வெற்றி

டெல்லி, ஜூலை 4- உலக செஸ் போட்டியின் நடப்பு சாம்பியனும், இந்திய இளம் கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ், குரோஷியாவின் சாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் போட்டியின் ஆறாவது சுற்றில், முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன் மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் பலவீனமான வீரர் என கூறி இருந்தார். இந்த நிலையில், கார்ல்சனை வீழ்த்தி பதிலடி கொடுத்து இருக்கிறார் குகேஷ். இந்தப் பரபரப்பான வெற்றியின் மூலம், குகேஷ் முதல் நாளில் கூட்டு முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது 10 புள்ளிகளுடன் தனிப்பெரும் முன்னிலையைப் பிடித்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன் மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் பலவீனமான வீரர் என கூறி இருந்தார். இந்த நிலையில், கார்ல்சனை வீழ்த்தி பதிலடி கொடுத்து இருக்கிறார் குகேஷ். இந்தப் பரபரப்பான வெற்றியின் மூலம், குகேஷ் முதல் நாளில் கூட்டு முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது 10 புள்ளிகளுடன் தனிப்பெரும் முன்னிலையைப் பிடித்துள்ளார். கார்ல்சனுக்கு சவால் விட்ட குகேஷ்: கார்ல்சனை எதிர்கொள்வதற்கு முன், இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா ஆகியோரையும் குகேஷ் வீழ்த்தி தனது அபாரமான ஃபார்மை நிரூபித்திருந்தார். குகேஷுடன் மோதுவதற்கு முன், கார்ல்சன், “குகேஷ் இங்கு கடந்த முறை சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன், ஆனால் அவர் இந்த வடிவத்தில் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. அவர் அத்தகைய ஒரு போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று காட்ட எதையும் செய்யவில்லை. அவரது நலனுக்காக, அவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த போட்டியில் அவரை எதிர்கொள்ளும்போது, நான் அவரை ‘பலவீனமான வீரர்களில் ஒருவராகவே’ கருதி விளையாடுவேன்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கார்ல்சனின் இந்த பேச்சுக்கு, அவரை வீழ்த்தி குகேஷ் பாடம் புகட்டியுள்ளார். இந்த தொடரில் குகேஷ் மற்றும் கார்ல்சன் இடையேயான மூன்று மோதல்களில் இது முதல் போட்டியாகும். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் ரேபிட் (வேகமான) வடிவத்தில் விளையாடப்பட்டது. அடுத்த வரவிருக்கும் போட்டிகள் பிளிட்ஸ் (மிக வேகமான) வடிவத்தில் நடைபெறும்.

Exit mobile version