குக்கரில் போதைப்பொருள் தயாரித்த வெளிநாட்டு ஆசாமி கைது

பெங்களூர் : நவம்பர். 10 – நகரின் ராமமூர்த்தி நகர் பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவன் நாட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான எம் எம் டி ஏ ஆகிய போதை பொருள்களை தயாரித்து அவற்றை பெங்களூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல மாவட்டங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வருவது குறித்து நம்பகமான தகவல்களை பெற்ற நகர் சி சி பி போதை பொருள் தடுப்பு நடவடிக்கை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு கடந்த ஐந்தாம் தேதியன்று அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவலஹள்ளி போலீஸ் சரகத்தில் இருந்த அவனுடைய வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ஐந்து கிலோ எம் எம் டி ஏ மாத்திரைகள் , இந்த போதை பொருளை தாயாரிக்க தேவையான கச்சா பொருள்கள் , மற்றும் பிரெஸ்டிஜ் குக்கர் சூர்யா நிறுவனத்தின் ஸ்டவ் , ஒரு காஸ் சிலிண்டர் , ஒரு மொபைல் போன் , இரண்டு டிஜிட்டல் எடை இயந்திரம் , மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ராமமூர்த்தி நகரில் இவனுக்கு எதிராக போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வரும் 20 வரை போலீஸ் காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.