குங்குமப் பூ பயன்கள்

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும். முகம் பிரகாசமடையும்
குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது. மேலும் குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி எவ்வித குறையும் இல்லாமல் முழுமையடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலுருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தையின் நிறம் கூடும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மசக்கையாக இருக்கும்போது பெண்களுக்கு எதை சாப்பிடாலும் வாந்தி உணர்வு தோன்றும். குங்குமபூவில் உள்ள வேதிப்பொருள் அந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும். அதற்க்கு தான் குங்குமபூ கலந்த பாலை கொடுக்கிறார்கள். கர்ப்பிணி மட்டுமல்லாமல் மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம்.
குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் போல செய்து அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.
மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்கள் குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரக்கிறது. வயது முதிர்வினால் வரும் கண் பார்வை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதான் மூலம் பாதிப்பின் தீவிரம் குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.