குஜராத் தடுப்பணைக்கு பிரதமர்மோடியின் தாயார் பெயர்

அகமதாபாத், ஜன.7-
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 4-ம் தேதி நடந்தது. 400 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட இந்த தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரங்களில் பணி முடிய உள்ள நிலையில் தற்போது அதற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் மரணம் அடைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் நினைவாக ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.