குஜராத் தேர்தலுக்கு பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் : முதல்வர்

பெங்களூர்: நவம்பர். 8 – குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடக்க உள்ளது . அதற்க்கு பின்னர் மாநில அமைச்சரவை விஸ்தரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன். மேலிட தலைவர்கள் தற்போது குஜராத் தேர்தல்களில் மும்முரமாயிருப்பதால் அந்த தேர்தல்கள் முடிந்த பின்னர் என்னை அழைப்பார்கள். அப்போது அமைச்சரவை விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்கும் வாய்ப்புகள் உள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த விரைவில் டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டக்மன்ற தேர்தலுக்கு புதிய முகங்களுக்கு வழி கொடுக்கும் வகையில் அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்க உள்ள நிலையில் அமைச்சரவை விஸ்தரிப்பு விஷயமாக முதல்வர் பல மாதங்களாக தீவிர அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.