குடகு மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி

மடிகேரி : மே. 24 – இந்த மாவட்டத்திலும் யானைகளின் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை வரை மூன்று பிரிவுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளன. காட்டு யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடக்கும் உராய்வு மோதல் ஆகியவற்றை தடுக்க நிர்வகிப்பு தொழில் நுட்பங்களை நடைமுறை படுத்த மூன்று மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட பலமாநிலங்களவிலான குழு அமைக்கப்பட்டிருப்பதுடன் இதில் கர்நாடகா , தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளில் ஒரே நேரத்தில் காட்டு யானைகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களின் வன துறையினர் மூன்று மாநிலங்களுக்கிடையே குழுவை அமைத்து சரியான திட்டம் வகுக்கவும் மற்றும் விஞ்ஞான முறையில் இதற்க்கு பரிகாரம் காணவும் முயற்சித்து வருகின்றனர். andha வகையில் கர்நாடகா , தமிழ் நாடு மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை உட்பட வேறு பல தகவல்களையும் சேகரிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். குடகு உட்பட ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மூன்று பி ரிவுகளாக காட்டு யானைகள் எண்னிக்கை பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறை வாயிலாக சில வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அதன் படி ஒரே மாதிரியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முதல் நாள் பிளாக் மாதிரிகள் , இரண்டாவது நாள் லைன் ட்ரான்ஸக்ட் (யானைகளின் நடமாட்ட விவரங்கள்) ,மற்றும் மூன்றாவது நாள் நீர்நிலைகள் பற்றியவிவரங்கள் என மூன்று பிரிவுகளில் இந்த சர்வே நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு ? ஆண் யானைகள் எத்தனை பெண் யானைகள் எத்தனை ,யானைக்குட்டிகள் மற்றும் வயது முதிர்ந்த யானைகள் எத்தனை ஆகிய அனைத்து விவரங்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஏற்கெனவே வனத்துறை ஒவ்வொரு வளையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள5 கி மீ பரப்பளவிலான மாதிரி பிளாக்களில் ஒவ்வொரு கண்காணிப்பிலும் உள்ள மூன்று ஊழியர்கள் கொண்ட குழுவுடன் 15 கி மீ கால்நடையாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். நேரில் தாங்கள் எதிர் கொள்ளும் யானைகளில் கும்பலாக இருக்கும் மொத்த யானைகளின் எண்ணிக்கை , ஆண் மற்றும் பெண் யானைகளின் எண்ணிக்கை , மற்றும் யானைக்குட்டிகள் மற்றும் இவற்றின் வயது விவரங்களை சேகரித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்று லேன் ட்ரன்செக்ட்ஸ் என்ற யானைகளின் நடமாட்ட பாதைகள் பிரிவில் ஆய்வுகள் நடந்துள்ளது. இதில் இரண்டு கி மீ பாதையை அதிகாலை ஆறு மணிக்கு துவங்கப்பட்டது. இந்த பாதைகளில் தென்படும் யானைகளின் கால் தடயங்கள் , சாணங்கள் , ஆகியவை பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.