குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி

பெங்களூர்,ஆக. 3 – பெங்களூர் சிவாஜி நகர் பஸ் நிலையம் அருகே 4 மாடி கட்டிடத்தின் மீது இருந்த குடிநீர் தொட்டி இடிந்து கீழே தள்ளுவண்டி துரித உணவு கடை மீது விழுந்தது. இதில் இந்த கடையை நடத்துபவர் மற்றும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் பலியானார்கள் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். நேற்று இரவு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் பெயர் அருள். இவர் தள்ளுவண்டியில் பிரைட் ரைஸ் துரித உணவு கடை நடத்துபவர். நேற்று இரவு சிவாஜி நகர் பஸ் நிலையம் அருகே உள்ள நான்கு மாடி பர்னிச்சர் கடை எதிரே தனது கடையை நிறுத்தி துரித உணவை விற்பனை செய்து கொண்டு இருந்தார் சிலர் அதை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் மீது இருந்த குடிநீர் தொட்டி மற்றும் சுவற்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து இவர்கள் மீது விழுந்தது
இச்சம்பவம் இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது. கட்டிடத்தை ஒட்டிய நடைபாதையில் தள்ளு வண்டியைச் சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தனர். கட்டிடத்தின் மீது இருந்த தண்ணீர் தொட்டி, தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 3 பேர் புதையுண்டனர்.
[அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள பௌரிங் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு 2 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூன்றாவது நபர் படுகாயம் அடைந்து ஐசியூவில் உள்ளார். நான்கு மாடி கட்டிடத்தின் மீது உரிய பாதுகாப்பு அம்சத்தோடு குடிநீர் தொட்டி வைக்கப்படவில்லை எனவே அந்த உரிமையாளரின் அலட்சியத்தால் இந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது என்று பல்வேறு தரப்பில் இருந்த புகார்கள் கூறப்பட்டது. எனவே இது குறித்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜி நகர் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பௌரிங் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது