குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து குரங்குகள் அட்டகாசம்

பெங்களூர் ஆக 16- பெங்களூரில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வனப்பகுதியில் இருந்த குரங்குகள் எல்லாம், நகரப் பகுதியில் புகுந்து பலரின் நிம்மதியை கெடுத்து வருகிறது.
பெங்களூரில் பலர் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் குடியேறி உள்ளனர். வனப்பகுதியில் வாழ்ந்து வந்த குரங்குகள் தற்போது அடுக்குமாடி கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து, தொல்லைகளை கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பல புகார்கள் வனத்துறைக்கும் மாநகராட்சிக்கு குவிந்த வண்ணம் உள்ளது.
குரங்குகளை விரட்ட பட்டாசுகள் வெடித்து விரட்டப்படுகிறது. ஆயினும் முழுமையாக குரங்குகள் வெளியேறவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் 25 30 குரங்குகள் புகுந்துள்ளன. பாதுகாப்புக்கு உள்ள செக்யூரிட்டிகளை தாக்குகிறது. வீடுகளில் புகுந்து பிரிட்ஜிகளை திறந்து உணவு பொருட்களை இழுத்து வெளியே தள்ளி நாசப்படுத்துகிறது.
முதியவர், சிறுவர்கள் உணவுகளை பறித்து தின்கிறது. பாதிக்க வைக்கிறது. இவைகளுக்கு உரிய விடுதலை கிடைக்க வேண்டும் என்று குடியிருப்பில் உள்ளவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2000- 2001 ல் 1168.02 சதுர கிலோமீட்டர் இருந்த பரப்பளவு, 2020 -21ல் 709 .46 சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது. இது 458. 56 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
இதனால் இந்த வனப்பகுதி,மில் வீடுகளாக மாறி நகரப் பகுதியாக மாறி இருக்கிறது. நகரவாசிகளும் விலங்குகளும் இவ்விடத்தில் உள்ள கட்டிடங்களில் நடமாட தொடங்கியுள்ளது என ஆய்வாளர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோபாலன் ஜுவல்லரி அடுக்குமாடி கட்டிட பகுதியில் 25 முதல் 30 குரங்குகள் வரை ஆக்ரோஷமாக திரிகிறது. அவ்விடத்தில் விளையாடும் குழந்தைகளை அந்த குரங்குகள் காயப்படுத்தி வருகிறது. வீட்டுக்குள் புகுந்து பால்கனியிலிருந்து வீட்டின் கழிவுகளை வெளியேற்றுகிறது.
எண்ணூர் சாலையில் உள்ள மந்திரி வெப்சிட்டி, பூர்வா ஃபார்ம் பீச் அப்பார்ட்மெண்டிலும், அபிக் கெரேயில் சோமேஸ்வரா லே அவுட் பகுதியிலும் இத்தகைய குரங்குகளின் தொல்லை மேலும் அதிகமாகி வருகிறது.
அண்மையில் கோடை காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால், குரங்குகள் அதிகரிக்க காரணமானது. இந்த அச்சுறுத்தல் உச்சத்தை எட்டியது.