குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கல்

ஓசூர்: அக்.13-
வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் வியாபாரிகள் பட்டாசுகளை இருப்பு வைத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், தமிழக எல்லை யான ஜுஜுவாடியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. வரும் தீபாவளி பண்டிகை விற்பனையை மையமாக வைத்து இக்கடைகளுக்கு தற்போது, சிவகாசியிலிருந்து பட்டாசுகள் வாகனங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஓசூர் பகுதி பட்டாசுக் கடைகளில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதி மக்களும் பட்டாசுகள் வாங்க வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் அளவுக்கு அதிகமாகவும், பாதுகாப்பு விதிகளுக்கு மாறாகவும் பட்டாசுகளை இருப்பு வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் மற்றும் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில் நடந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பட்டாசுக் கடைகள் பின்பற்றுவதைக் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூட்டத்தில், வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் இரு தினங்களுக்குள் ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்துப் பட்டாசுக் கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.