பெங்களுர் : ஆக. 31 – ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனின் கன் மேனாக இருந்த ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் மது போதையில் நண்பனை சுட்டு உள்ள சம்பவம் திலக் நகரில் நடந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 21 வருடங்கள் சேவை ஆற்றி காங்கிரஸ் பிரமுக உமாபதி கௌடாவின் சகோதரரின் கன் மேனாக பணியாற்றிவரும் பிரஷாந்த் மது போதையில் அணில் குமார் என்ற மற்றொரு கன் மேனை துப்பாக்கியால் சுட்டிருப்பதுடன் அதிஷ்டவசமாக அணில் குமார் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். தோட்டா தலைக்கு மிக அருகில் வந்து பாய்ந்துள்ளது . இதனால் மயிரிழையில் அனல் குமார் தப்பித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27 அன்று இரவு 12 மணியளவில் ஜெயநகர் 4வது பிளாக்கில் உள்ள பி ஜியில் மது போதையில் கன் மேன் பிரஷாந்த் மற்றதொரு கன் மேன் அணில் குமார் என்பவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்னர் அருகில் உள்ள பாரில் பிரஷாந்த் மற்றும் அணில் குமார் இருவரும் மது வாங்கி இருவரும் பி ஜி அறையிலேயே குடித்து பார்ட்டி நடத்தியுள்ளனர். இரவு 10.30 மணியளவில் ஊரில் இருந்த நண்பன் அமித் என்பவன் இவர்களின் அறைக்கு வந்துள்ளார். அமித் பி ஜி அறையின் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளான் . பிரஷாந்த் பி ஜியில் உணவு அருந்திக்கொண்டிருந்தான். அப்போது தன்னுடைய மனைவியுடன் போனில் உரக்க பேசிக் கொண்டிருந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு வந்த அணில் ஏன் இப்படி கத்துகிறாய் நிதானமாக பேசு என கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பிரஷாந்த் தன்னுடைய அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து அணிலை நோக்கி சுட்டுள்ளான் . அதிர்ஷ்டவசமாக தோட்டா அணிலை நெருங்கி பின்னர் குறி தவறியுள்ளது. பின்னர் சவ்ட்ச் மற்றும் அறையில் இருந்த கண்ணாடி தோட்ட பாய்ந்து உடைந்துள்ளது. பி ஜியில் நடந்த சம்பவம் குறித்து அணில் திலகநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்படி துப்பாக்கியால் சுட்ட பிரஷாந்தை போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரஷாந்த் 21 வருடங்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2015ல் ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு ஊழியராக இருந்துள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு பாயுடுக்கும் அவருடைய மகன் நா ரா லோகேஷ் என்பவருக்கும் கன் மேனாக இருந்துள்ளார். டி டி பி கட்சியில் தற்போதைய இளம் பிரமுகர் லோகேஷுக்கு கன் பேராக் இருந்து பின்னர் பெங்களூரில் காங்கிரஸ் பிரமுகர் உமாபதி கௌடாவின் சகோதரர் தீபக் கௌடாவுக்கும் கன் மேனாக இருந்துள்ளார்.