குடும்பத்துடன் மைதானத்தில் இறங்கிய ஷாருக்கான்

ஐபிஎல் இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிலையில் மைதானத்தில், கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் அவரின் குடும்பத்தினரின் ரியாக்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் இறுதி போட்டியில் ஹதராபாத்-கொல்கத்தா அணி மோதின.
ஃபைனல் மேட்ச் செம விறுவிறுப்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மேட்ச் “பொசுக்குன்னு” ரொம்பவும் சிம்பிளாக முடிந்துவிட்டது என்று தான் சொல்லியாக வேண்டும். லீக் ஆட்டத்தில், 200 ரன்களை அசால்ட்டாக அடித்த அணிகள் ஃபைனல் போட்டியில் அதேபோல் 200 ரன்கள் மேல் அடிப்பார்கள் சேசிங் செம விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் இன்னிங்சில் கொல்கத்தாவின் பௌலிங்கை சமாளிக்கமுடியாமல் ஹைதராபாத் அணி வெறும் 113 ரன்களை மட்டுமே எடுத்து ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.சரி, குறைவான ரன்னாக இருந்தாலும் இரண்டவது இன்னிங்சில் ஹைதராபாத்தின் பௌலிங் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்த்தனர். சேசிங் செம விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது கொல்கத்தா அணி. சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்துக்கு எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கொல்கத்தா அணி கோப்பையை வென்ற குஷியில் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் மைதானத்தில் இறங்கி ரசிகர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார். ஷாருக்கானின் மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான், மகன் ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் அனைவரும் மைதானத்தில் இறங்கி கொல்கத்தா அணியின் வெற்றியை கொண்டாடினர்.
கையில் ஐபிஎல் கோப்பையை வைத்துக்கொண்டு கொல்கத்தா அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்து வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.