குடும்பத்த தகராறில் ஒருவர் கொடூர கொலை

ஹாசன் : நவம்பர் . 2 – குடும்ப தகராறு காரணமாக தாய் மாமனை மருமகன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அரிசிகேரே தாலூகாவின் பாணாவரா ஒன்றியம் கன்ஜெகெரே கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த பிரபு ஸ்வாமி (50) என்பவர் கொலையுண்டவர். இவரை இவருடைய மருமகன் அஜய் (22) என்பவர் கொலை செய்துள்ளார். அஜய்யின் தாய் சாவித்ரம்மா ஏழெட்டு வருடங்களுக்கு முன்னரே கணவனை விட்டு தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்துளார் . இவருடைய சகோதரன் பிரபு ஸ்வாமி மற்றும் சாவித்ரம்மா கஞ்சிகெரே கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டில் தங்கியிருந்தனர். நிலம் விஷயம் தொடர்பாக அடிக்கடி தங்கையுடன் பிரபு ஸ்வாமி சண்டைகள் போட்டுள்ளார். மது அருந்தி விட்டு வந்து உடன் பிறந்த தங்கை மற்றும் அவளுடைய மகளை பிரபு ஸ்வாமி தகாதவார்த்தைகளால் திட்டி வந்துள்ளான். இதனால் வெறுத்துப்போன சாவித்ரம்மா .தன்னுடைய மகனிடம் அவனுடைய மாமன் சண்டை போட்டு வரும் விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இதே போல் நேற்றும் பிரபு ஸ்வாமி குடிபோதையில் வந்து தங்கையிடம் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான் . இது குறித்து தகவல் அறிந்து கன்ஜெகெரெ கிராமத்திற்கு வந்த அஜய் வீட்டில் இருந்த மாமன் பிரபு ஸ்வாமியை கத்தியால் அறுத்து கொன்றுள்ளான் . சம்பவ இடத்திற்கு பானவாரா போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.