குடும்பத் தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2000

பெங்களூரு/மைசூர், ஆக.30- கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முக்கிய உத்தரவாத திட்டங்களில் ஒன்றான “கிரஹலட்சுமி” திட்டம் கலாசார நகரமான மைசூரில் இன்று துவக்கப்பட்டது. முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜனை கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு இனி ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.
இது காங்கிரஸ் அரசாங்கத்தின் ஐந்து உத்தரவாதத் திட்டங்களைச் செயல்படுத்திய பிறகு நான்காவது பெரிய உத்தரவாதத் திட்டமாகும்.
மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் இந்த திட்டம் துவக்கப்பட்டது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அனைவரின் முகத்திலும் நாங்கள் சொன்னதைச் செய்கிறோம் என்ற உணர்வு காணப்பட்டது இனிமேல் தங்கள் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட இருப்பதால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

மாநில அரசு சமீபத்தில் 100 நாட்களை நிறைவு செய்ததையடுத்து, மைசூரில் நான்காவது திட்டம் தொடங்கப்பட்டு, கலாச்சார நகரமான மைசூரில் பண்டிகை சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து இடங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது, முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி குறித்து பெண்கள் உட்பட மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட 5 உத்திரவாத திட்டங்களை, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொன்றாக செயல்படுத்தி, நிறைவேற்றி வருகிறது.இதன் மூலம் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான கிரிலக்ஷ்மி யோஜனா திட்டத்தை அமல்படுத்தியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன