குடும்பப் பிரச்சனை தாய் மகன் தற்கொலை

பெங்களூர் : ஜனவரி. 14 – குடும்பகலவரத்தின் பின்னணியில் தாய் மற்றும் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ராம்நகரின் குமாரசாமி லே அவுட்டில் நடந்துள்ளது. குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்த விஜயலக்ஷ்மி (50) மற்றும் அவருடைய மகன் ஹர்ஷா (25) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் மகனாவர். தாய் விஜயலக்ஷிமியுடன் உணவு விஷயமாக மகன் ஹர்ஷா இரவு சண்டை போட்டுள்ளான் . மகனின் பேச்சால் வேதனையடைந்த விஜயலக்ஷ்மி வீட்டின் அருகில் இருந்த குடிநீர் தொட்டியில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். தாய் இறந்துபோன தகவல் அறிந்து மிகவும் மனம் நொந்த ஹர்ஷா தானே தாயின் சாவுக்கு காரணம் என தானும் மனம் நொந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளான் . இந்த இரட்டை தற்கொலைகள் குறித்து ஐஜூரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.