குடும்பப் பிரச்சினையில் கத்திக்குத்து ஒருவர் பலி

பெங்களூர், ஜன. 16-
குடும்ப பிரச்சனையில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ஆயத்த ஆடை நிறுவன ஊழியர் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். அதில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹெசரகட்டா, மட்கூரை சேர்ந்தவர் பாரத் குமார். இவர் ராதா என்ற பெண்ணை காதலித்து 10ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.ராதாவின் உறவினர் கேசவ மூர்த்தி, (32), மைத்துனர் கல்லேஷ்(27), ஆகியோர் இவர்கள் பாரத் குமாரின் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு வருவதாக கோபம் அடைந்தார்.இந்த இருவரையும் மதுபான கடைக்கு பாரத் குமார் அழைத்துச் சென்றுள்ளார். குடிக்க வைத்துள்ளார். குடும்ப பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று பாரத் குமார் கூறியுள்ளார். ஆனால், இவரின் பேச்சை கேசவ மூர்த்தியும், கல்லேஷும் கேட்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பாரத் குமார் கத்தியால் இருவரை குத்தியுள்ளார். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கேசவ மூர்த்தி உயிர் இழந்தார்.சோலதேவனஹள்ளி போலீசார் பாரத் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். கல்லேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.