குடும்ப சண்டை -சித்தியை கொலை செய்த மகன்

பெங்களூரு, ஜூன் 18:
குடும்ப தகராறு காரணமாக, மகன் தனது சித்தியை
கட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஹோஸ்கோட்டை சித்தார்த்தா நகரில் நேற்று இரவு நடந்துள்ளது.
தொம்மசந்திராவைச் சேர்ந்த சந்திரம்மா (40) கொலை செய்யப்பட்டார், மகன் வெங்கடேஷை கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. சந்திரம்மா கைவரா தாத்தையா கோவிலுக்குப் சென்றுவிட்டு இரவு திரும்பி வந்துள்ளார். வெங்கடேசனுடன் சண்டை போட்டார். சண்டை விபரீதமாக மாறியதில் ஆத்திரமடைந்த அவர், சந்திரம்மாவின் தலையில் கட்டையால் தாக்கி உள்ளார். பலத்த காயம் அடைந்த சந்திரம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஹோஸ்கோட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷைக் கைது செய்யது, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.