குடும்ப தகராறு : தம்பதி தற்கொலை

பெங்களூர் : ஆகஸ்ட். 6 – தூக்கு மாட்டி தம்பதி தற்கொலைசெய்து கொண்டுள்ள துயர சம்பவம் ராம்நகரின் பாலகேரி லே அவுட்டில் நடந்துள்ளது. கிரண் (29) மற்றும் காயத்ரி (28) தற்கொலை செய்துகொண்ட தம்பதி . தற்கொலை செய்து கொண்ட கிரண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பதுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. குடும்ப தகராறால் இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவர்களின் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளது. இன்று காலை பல மணி நேரமாகியும் வீட்டிலிருந்து இவர்கள் வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தார் வீட்டை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தம்பதியர் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் . தகவல் அறிந்து வந்த ராம்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.