Home பக்தி குடைவரை கோயில் … குமரனின் குன்றம்…குதூகலமாய் தயாராகுது

குடைவரை கோயில் … குமரனின் குன்றம்…குதூகலமாய் தயாராகுது

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் வெகுவிமசர்சையாக நடக்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஜொலிக்கும் ராஜகோபுரம்
கும்பாபி ஷே கத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. வர்ணங்கள் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம்.
பரிவார தெய்வங்களுக்கு சாத்துப்படி செய்வதற்காக அஷ்ட பந்தன மருந்து இடிக்கும் பணியை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா துவக்கி வைத்தார். திருப்பரங்குன்றம் கோயில் மகா மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் செல்லும் வழியில் உள்ள பித்தளை நிலை கதவுகளுக்கு பாலிஷ் போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா மண்டபத்தின் மேல் பகுதியில் முதல் முறையாக வரையப்பட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணத்திற்காக இந்திரன் தாரை வார்த்து கொடுக்கும் காட்சி.
கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது.

Exit mobile version