குட்டி யானை தாயிடம் சேர்ப்பு

குடகு, நவ.15-
வி ராஜ்பேட், நரியந்தா கிராம பஞ்சாயத்துக் குட்பட்ட, கரட கிராமத்தின் அருகே உள்ள கீமலே என்ற இடத்தில், யானை ஒன்று குட்டி ஒன்றை பிரசவித்தது.காலை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு குட்டி யானை பிறந்திருக்கும் தகவல் அறிந்து, அதனை பார்ப்பதற்காக திரண்டு வந்தனர். இதனை கண்டதும் தாய் யானை அங்கிருந்து குட்டியை விட்டுவிட்டு வெளியேறிவிட்டது.
குட்டி யானை தாயில்லாமல் இருப்பதை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் .குட்டி யானைக்கு குளுக்கோஸ் தரப்பட்டது. கிராம மக்கள் உதவியுடன் குட்டியானையை தாய் யானையுடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
வனத்துறையினர் ஜீப் ஒன்றில் குட்டி யானையை, தாயுடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
வனப் பகுதி என்பதால்
சிறிது தூரம் மட்டுமே ஜிப்பில் செல்ல முடிந்தது. பின்னர் நடந்து சென்று தாய் இருக்கும் இடத்தை தேடினர். இவர்கள் முயற்சியில் தாய் யானை கிடைத்தது.
குட்டி யானையை அதனுடன் சேர்க்கப் பட்டது. பொதுவாக யானை 7 கி.மீ., சென்றிருப்பது அபூர்வம் என அதிகாரி தேவய்யா கூறினார்.