பெங்களூர் : ஆகஸ்ட். 12 – தேசிய பாதுகாப்பு படை இயக்கத்தின் பிரமுகர் புனீத் கெரேஹள்ளியை கைது செய்துள்ள சி சி பி போலீசார் அவனுக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் அமைதியை குலைக்கும் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குற்றங்களை வைத்து ஜெ பி நகர் போலீசார் புனீத் கெரெஹள்ளிக்கு (32) எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக இணை போலீஸ் ஆணையர் முனைவர் எஸ் டி ஷரனப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த புனீத் கெரேஹள்ளி தேசிய பாதுகாப்பு படை என்ற இயக்கத்தை துவங்கி அந்த இயக்கத்தின் வாயிலாக மக்களை மிரட்டுதல் , மற்றும் சமூக மைதிக்கு ஊறு விளைவித்தல் , பசு பாதுகாப்பு பெயரில் வியாபாரிகளை மிரட்டும் செயல்களிலும் ஈடு பட்டு வந்துள்ளான். 2013இலிருந்து கொலை , கொலை முயற்சி , உயிரமிரட்டல் மற்றும் வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடு பட்டு வந்துள்ளான். இவனுக்கு எதிராக டி ஜெ ஹள்ளி , பேகூர் , கங்களிப்புறா , ஹல்சூர் கேட் , சாம்ராஜ்பேட் , எலக்ட்ரானிக் சிட்டி , மலவல்லி மற்றும் சாத்தனூர் உற்பட பல்வேறு போலீஸ் சரகங்களில் 10க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருப்பதுடன் இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்த புனீத் கெரஹள்ளிக்கு எதிராக ரௌடி பட்டியல் திறக்கப்பட்டுள்ளது . கொலை விவகாரம் தொடர்பாக சமீபத்தில்தான் சிறைக்கு சென்றிருந்த புனீத் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தால். ஆனாலும் தன்னுடைய பழைய நடவடிக்கைகளையே மீண்டும் தொடர்ந்த புனீத் கெரேஹள்ளிக்கு நோட்டீஸ் அளித்த ஏ சி பி உன் மீது ஏன் ரௌடி பட்டியல் திறக்கக்கூடாது என்பதற்கு விவரம் அளிக்க வேண்டும். தவறினால் எவ்வித விசாரணையும் இன்றி உனக்கு எதிராக ரௌடி பட்டியல் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்க்கு முன்னாள் பெரும் சர்ச்சைக்குள்ளான ஹலால் கட் உட்பட பல்வேறு விவகாரங்களில் புனீத் கெரேஹள்ளி உட்பட்டுவந்திருப்பதுடன் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பசு கடத்தல்காரர்களை போலீசில் ஒப்புவிக்கும் சமயத்தில் நபர் ஒருவரை இவன் கொலை செய்துள்ளதாக தகவல் உள்ளது. ராம்நகர் போலீசார் இவனை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று சமீபத்தில் தான் வெளியே வந்துள்ள புனீத் கெரேஹள்ளியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளதாக டி சி பி முனைவர் ஷரனப்பா தெரிவித்தார்.