குத்தகைதாரர் தற்கொலை வழக்கு ஈஸ்வரப்பாவுக்கு சங்கடம்

பெங்களூர்: ஜனவரி. 6 – குத்தகையாளர் சந்தோஷ் பாட்டில் தற்கொலை தொடர்பாக பி ஜே பி முன்னாள் அமைச்சர் ஈஸ்வரபாவுக்கு மீண்டும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையில் பதிவாகியுள்ள அனைத்து சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு 42வது சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் வரும் ஜனவரி 31க்குள் அனைத்து சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சந்தோஷின் குடும்பத்தார் பி அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்த உடுப்பி போலீசார் முழு அறிக்கையை தாக்கல் செய்ய பின்வாங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் நீதிமன்றத்தில் சந்தோஷ் குடும்பத்தார் மனு தாக்கல் செய்த பின்னர் நீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் சில சாட்சிகளின்படி குத்தகையாளர் சந்தோஷ் அமைச்சர் ஈஸ்வரபாவின் உதவியாளரிடம் லஞ்ச பணம் கொடுத்திருப்பது வாட்ஸ் அப் வாயிலாக தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக சந்தோஷ் தற்கொலை வழக்கு ஈஸ்வரபாவை மேலும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி தீவிரமாக களம் இறங்கி உள்ளது. பிஜேபி தேசிய தலைவர்கள் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து வெற்றிக்கான வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் குத்தகைதாரர் தற்கொலை வழக்கு பிஜேபியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரமான ஈஸ்வர ப்பாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பது காங்கிரஸ் கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக அந்த கட்சி வட்டாரம் தெரிவித்தது