குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சியின் கனவு நனவானது

பெங்களூர் : மே. 13 – குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பெங்களூர் மாநகராட்சியின் கடந்த பல பத்தாண்டுகள் கனவு கடைசியில் நனவாகும் காலம் நெருங்கியுள்ளது. கர்நாடக மின்துறை சார்பில் பிடதியில் ஜூன் மாதத்திலிருந்து சோதனை கட்டமாக மின்சாரம் உற்பத்தி துவங்கப்போகிறது. சிலிகான் நகரத்தில் தொடர்ந்து 5 ஆயிரம் டன் அளவிற்கு மின்சாரம் உற்பத்தியாகிவருவதுடன் இதை விநியோகிப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு சுமார் 900 கோடி க்கும் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. ஆனாலும் மின்சார தட்டுப்பாடு கூறிய வில்லை. இப்போது குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் ஓரளவிற்கு இந்த பிரச்சனை தீர வழியுள்ளது. குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ள சில நிறுவனங்கள் மாநகராட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பல வருடங்கள் கடந்திருப்பினும். எந்த நிறுவனமும் மின்சார உற்பத்தியை இது வரை துவங்க வில்லை. ஆனால் அரசின் நிறுவனமான கே பி டி சி எல் தற்போது மின்சாரம் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிடதி – ஹாரோஹள்ளி நெடுஞசாலியில் மக்குலாவில் கே பி சி எல்லுக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 15 ஏக்கரில் மின்சார உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கெனவே கே பி டி சி எல்லுடன் மின்சார விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து சோதனை கட்டமாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது 11.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கம் உள்ளது அத்ய நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இந்த மையத்திலிருந்து நகரில் தொடர்ந்து பயன் படுத்தப்படும் 600 டன் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியே சேகரிப்பு மையங்கள் , உலர் குப்பை சேகரித்தல், ஆகிய மையங்களில் சேகரிக்கப்படும் ஆர் டி எப் குப்பைகளை பிடதி பிரிவுக்கு அனுப்பிவைக்கும். மொத்தம் 260 கோடி ரூபாய்கள் செலவில் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. கே பி சி எல் மற்றும் மாநகராட்சி இரண்டும் சேர்ந்து 50 சதவிகித செலவை ஏற்றுள்ளன .தவிர இந்த மையத்தை நிறுவும் பொறுப்பையும் மின்வாரியம் ஏற்றுள்ளது.
இந்த திட்டத்தை நிறுவும் பொறுப்பை நொய்தா நகரை சேர்ந்த ஐ எஸ் ஜி இ சி ஹெவி இன்ஜினியரிங்க் லிமிடெட் மற்றும் ஹிடாச்சி ஜோஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மின்தயாரிப்பு பிரிவிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 14 கோடி நிர்வகித்து செலவு மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது . நகரின் குப்பைகளை நிர்வகிப்பும் பொறுப்பை பெங்களூர் குப்பை நிர்வகிப்பு நிறுவனம் ஏற்றுள்ளது. .மாநகராட்சி பகுதியில் உற்பத்தியாகும் குப்பைகளை சேகரிக்க கோடி கணக்கான செலவில் 7 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் தங்கள் தகுதிக்கேற்ப குப்பைகளை சேகரித்துவரவில்லை. இதனால் குப்பைகளை சேகரிக்க நில நிரப்பு மையங்களையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உற்பத்தியாகும் 5 ஆயிரம் டன் குப்பையில் 3 ஆயிரம் டன் குப்பைகள் நில நிரப்பு பிரிவுக்கு செல்கிறது.
மிடுகானஹள்ளி பிரிவு பெரும்பாலும் நிரம்பியுள்ள நிலையில் ஹுல்லஹள்ளியில் புதிய பிரிவு திறக்கப்பட உள்ளது. குப்பைகளை சேகரித்து போக்குவரத்து செய்ய டெண்டர்கள் அழைத்து ஒரு வருடம் ஆகியிருப்பினும் இதுவரை இந்த பணி முழுதுமாக முடிய வில்லை.மாநகராட்சி கன்னஹள்ளி , தொடடபிதரக்கல்லு , மாவள்ளிபுரா , மண்டூரு , பெல்லஹள்ளி , சிக்கநாகமங்களா ஆகிய மையங்களில் மின்சாரம் உற்பத்தி தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்திருப்பினும் இதுவரை எந்த திட்டமும் கை கூடி வரவில்லை. மாநராட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் உற்பத்தி செய்யாமல் தோல்வி அடைந்த சதாராம் ஆல்ட்டர்நேட்டிவ் பியூயெல் அண்ட் எனர்ஜி லிமிடெட் , இண்டியன் இன்னோவேடிவ் இகோ கேர் , பார் க்ரீன் நெக்சஸ் நோவாஸ் மற்றும் என் இ ஜி ஆகிய நிறுவனங்களுக்கு அளித்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.