
பெங்களூர் : நவம்பர் . 7 – நகரில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவருக்கு சுமார் 30 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள மூன்று மில்லயன் டாலர் பணம் கிடைத்திருப்பது தாமதமாக தெரியவந்துள்ளது . கடந்த நவம்பர் முதல் தேதியன்று நாகவாரா ரயில் நிலையம் அருகில் செல்மன் எஸ் கே ( 39) என்பவர் குப்பை சேகரித்துக்கொண்டிருந்தபோது சுமார் மூன்று மில்லயன் டாலர் பணமிருந்த பிளாஸ்டிக் பை கிடைத்திருப்பதுடன் இந்த பை யாருக்கு சொந்தமானது என்பது இனமும் தெரியவரவில்லை. தவிர இதே பையில் ஐக்கிய நாட்டின் முத்திரை உள்ள கடிதமும் இருந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் நாடியாவை சேர்ந்த செல்வன் நகரில் குப்பைகள் சேகரித்துவந்ததுடன் பின்னர் அவற்றை விற்பனை செய்து வாழ்க்கை நடத்திவந்துள்ளார். நவம்பர் ஒன்று அன்று நாகவாரா ரயில் நிலையம் அருகில் குப்பைகளை சேகரித்துக்கொண்டிருக்கும்போது ரயில் தண்டவாளத்தின் மீது கருப்பு பை இருந்துள்ளது . அதை அவர் அம்ருதஹள்ளியில் உள்ள தன வீட்டுக்கு எடுத்து சென்றிருந்தார். பின்னர் வீட்டில் பையை திறந்து பார்த்தபோது அதில் டாலர் பணம் இருந்துள்ளது. இவற்றை வைத்து என்ன செய்வது என தெரியாமல் செல்மன் பழைய சாமான் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். வாகனத்தில் சென்று கொண்டிருந்த கடைக்காரர் தான் வரும் வரை தன்னிடமே பணத்தை வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர் இவ்வளவு பணத்தை தன் வீட்டில் வைத்திருக்க தயங்கிய செல்மன் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஸ்வராஜ் இந்தியா சமூக சேவகர் ஆர் கலீம் உல்லா என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.சமுக சேவகர் நகர போலீஸ் ஆணையருக்கு இதன் குறித்து தகவல் அளித்துள்ளார். தவிர ஆணையர் தயானந்த் பையை கொண்டு வரும்போது செல்மனையும் உடன் அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு சென்ற செல்மன் தனக்கு ரயில் தண்டவாளத்தில் பை கிடைத்த விஷயம் குறித்து விவரித்துள்ளார். பின்னர் பை கிடைத்த இடத்தை போலீசார் வந்து பார்வையிட்டுள்ளனர். தவிர இந்த டாலர்கள் போலி என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இவற்றை சோதனைக்காக மத்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். என ஹெப்பால் போலீசார் தெரிவித்தனர்.