குப்பை தொட்டியில் கிடந்த பேப்பர்.. அடுத்த நொடியே ரூ.2.5 கோடிக்கு அதிபதி

காந்தி நகர், அக். 31- குஜராத் மாநிலத்தில் தனது தாத்தாவின் வீட்டைச் சுத்தம் செய்த வந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. அங்குக் குப்பைத் தொட்டியில் இருந்து பங்கு சான்றிதழ்களை அவர் கண்டுபிடித்திருக்கிறார். அதன் மதிப்பு மட்டும் ரூ.2.5 கோடியாம். இதைப் பார்த்தவுடன் அந்த நபர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டாராம். ஒருவருக்கு எப்படி எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே தெரியாது. இது ஒருவரை ஓவர்நைட்டில் உச்சத்திற்கே எடுத்துச் சென்றுவிடும். அப்படியொரு சம்பவம் தான் குஜராத்தில் நடந்துள்ளது. அங்கு ஒருவர் தனது தாத்தாவின் கிராமத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குச் சான்றிதழ்களை அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார். குப்பையில் கிடந்த பேப்பர் வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்த அதேநேரம் குடும்பத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
குஜராத்தின் உனாவில் உள்ள தனது தாத்தா சவ்ஜி படேலின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கியிருந்த வீட்டைச் சுத்தம் செய்யப் பேரன் சென்றிருக்கிறார். ஒவ்வொரு ரூமை சுத்தம் செய்து வந்தபோது குப்பையில் ஏதோ ஆவணங்களை அவர் பார்த்துள்ளார். கூடவே சில சான்றிதழ்களும் இருந்த நிலையில், அதை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது தான் அது சில நிறுவனத்தின் பங்குகளின் சான்றிதழ்கள் என்பது தெரிய வந்தது. ரூ.2.5 கோடி ரொக்கம் இந்தப் பங்குகளின் சந்தை மதிப்பைச் சரிபார்த்தபோது தான், அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது இதன் மதிப்பு சுமார் ரூ. 2.5 கோடியாக இருந்துள்ளது. நீண்ட காலாகவே வறுமையில் வாடி வந்த அவருக்கு இது ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆவதற்கான ஒரு வழியைக் கொடுத்தது. இருப்பினும், இந்தக் கோடீஸ்வர கனவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மேலும், இது குடும்பத்திலும் பெரிய சண்டையை உருவாக்கியது. அதாவது இந்த பங்குகளின் உரிமையாளர் யார் என்பதில் மறைந்த அந்த தாத்தாவின் பேரனுக்கும் மகனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பங்கு சான்றிதழ் இதில் விவாதமாக மாறியுள்ளதே அந்தப் பங்கு சான்றிதழ் தான்.. அதென்ன பங்கு சான்றிதழ் என்று பலருக்கும் குழப்பம் வரலாம்.. அதாவது இப்போது நீங்கள் ஒரு பங்குகளை வாங்குகிறீர்கள் என்றால் அவை உங்கள் டிமாட் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், முன்பு டிமாட் கணக்கு இல்லாத காலத்தில் அவை பங்கு சான்றிதழ்களாகவே வழங்கப்படும். காகிதத்தில் இருக்கும் இந்த பங்குச் சான்றிதழ்கள் தான் பங்குகளின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களாகும். இப்போது உங்களிடம் பங்கு சான்றிதழ்கள் இருந்தால்.. உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் அவை உங்கள் டிமாட் கணக்கில் வரவு வைக்கப்படும்.