குமாரசாமிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பெங்களூர் : ஏப்ரல் 15 – “ஹெச் .டி குமாரசாமி அளித்துள்ள அறிக்கையால் பெண்களின் கெளரவம் மற்றும் பாரம்பரியத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இதை தீவிரமாக கருதி தன்னார்வ வழக்கு பதிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலக்ஷ்மி சவுதரி தெரிவித்துள்ளார். இது குறித்து நாகலக்ஷ்மி சவுதிரி கூறுகையில் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பாலகர் குறித்து அநாகரீகமான வார்த்தைகள் பேசியுள்ள சஞ்சய் பாடீலுக்கு எதிராகவும் தன்நார்வ வழக்கு பதிவு செய்யப்படும் . சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பெண்கள் மற்றும் அவர்களின் கௌரத்தை , மரியாதையை குறைக்கும் வகையில் அறிக்கைகள் விடுப்பது துரதிர்ஷ்டவசமானது . இந்த விஷயத்தை சமூக பார்வையில் தீவிரமாக கருதி மகளிர் ஆணையம் எந்த அலட்சியமும் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும் .
துமகூர் பாராளுமன்ற தொகுதியின் பிஜேபி – மஜதா கூட்டணி வேட்பாளர் வி சோமண்ணாவுக்கு ஆதரவாக துருவகெரே நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த பிரசார பேரணியில் பேசிய குமாரசாமி காங்கிரசின் உறுதி திட்டங்களால் மாநிலத்தில் ஊரக பெண்கள் வழி தவறியுள்ளனர். என தெரிவித்திருந்தார். பெலகாவி அருகில் உள்ள ஹிண்டலகாவில் நடந்த பி ஜெ பி கட்சியின் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பெலகாவி தொகுதி பிஜேபி பொறுப்பாளர்சஞ்சய் பாட்டிலா பெலகாவி தொகுதியில் பிஜேபிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் சகோதரிகள் உறக்கம் இழக்கிறார்கள் .இவர்கள் இன்று உறக்கம் மட்டும் பெற வேண்டும். இல்லையெனில் ஒரு பெக் கூடுதலாக மது குடிக்க வேண்டும் என லக்ஷ்மி ஹெபலிக்கர் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார்.