குமாரசாமி கண்டனம்

பெங்களூர், மே 27-ஜே.டி.எஸ்.- பிஜேபி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் ஏ.தேவகவுடா தான் . ஆனால் சிலர் எங்கள் கூட்டணி வேட்பாளர் என தெரிவித்து வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எங்கள் பெயரை வேறு யாராவது பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிஜேபி- ஜேடிஎஸ் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசியதாவது:
பெங்களூர் பட்டதாரி தொகுதி தேர்தலில், எங்களின் ஜேடிஎஸ்- பிஜேபி கூட்டணி வேட்பாளராக ஏ.தேவேகவுடா போட்டியிடுகிறார்.மற்ற வேட்பாளர்களுக்கு எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், எங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் அல்லாத சென்னப்பட்டினாவை சேர்ந்த புட்டசாமி என்பவர் எனது மற்றும் தேவேகவுடா ஆகியோரின் படங்களை துண்டு பிரசுரங்களில் பயன் படுத்தி பிரச்சாரம் செய்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. நானும் தேவேகவுடாவும் ஆசீர்வாதம் செய்தோம் என்று புட்டசாமி உலா வருகிறார்.இது தவறான தகவல்‌ நானும் தேவேகவுடாவும் யாருக்கும் ஆதரவளிக்க வில்லை.எங்கள் பெயர் உருவப்படங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் முதல் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.