குமாரசாமி டெல்லி பயணம் மத்திய அமைச்சராக வாய்ப்பு

பெங்களூரு, ஜன. 17: மத்திய அரசின் அமைச்சரவையில் மஜத இடம்பெற உள்ளது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இது தொடர்பாக‌ பேச‌ மஜத சட்டமன்றத் தலைவர் எச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியுடன் இன்று டெல்லிக்கு செல்கிறார்.
பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ள மஜதவிற்கு மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு முன், மத்திய அரசின் அமைச்சரவையில் மஜத இடம்பெற உள்ளதாக சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. அமைச்சரவையில் எச்.டி.குமாரசாமி இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், எச்.டி.குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் இன்று டெல்லிக்கு செல்கின்ற‌னர். டெல்லியில் கூட்டணி குறித்து பாஜக தலைவர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் எச்.டி.குமாரசாமி இணைவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.குமாரசாமி டெல்லியில் இருந்து வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பெங்களூர் திரும்புவார். அதன்பிறகு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் சிலை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.